2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்த Delta Airlines விமானம் அவசரத் தரையிறக்கம்
அமெரிக்காவின் செண்டா எனா (Santa Ana) நகரிலிருந்து சியெட்டல் (Seattle) சென்றுகொண்டிருந்த டெல்ட்டா ஏர்லைன்ஸ் (Delta Airlines) விமானம், கடுமையான வானிலையால் அவசரமாகத் தரையிறங்க நேரிட்டது.
அமெரிக்காவின் செண்டா எனா (Santa Ana) நகரிலிருந்து சியெட்டல் (Seattle) சென்றுகொண்டிருந்த டெல்ட்டா ஏர்லைன்ஸ் (Delta Airlines) விமானம், கடுமையான வானிலையால் அவசரமாகத் தரையிறங்க நேரிட்டது.
63 பேருடன் பயணம் செய்த அந்த விமானம், அமெரிக்க நேரப்படி பிற்பகல் ஒரு மணியளவில் ரீனோ (Reno) நகரில் தரையிறங்கியது.
காற்றுக் கொந்தளிப்பு கடுமையாக இருந்ததால் அவ்வாறு நேரிட்டதாகக் கூறப்பட்டது.
சம்பவத்தில் ஐவர் காயமடைந்ததாகவும், அவர்களில் மூவர் சிறு காயங்களுக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
விமானம் தரையிறங்குவதற்கு முன்னர், 2 முறை தலைகுப்புறக் கவிழ்ந்ததாகப் பயணி ஒருவர் Twitterஇல் பதிவிட்டுள்ளார்.
விமான ஊழியர்கள் நிலைமையைக் கச்சிதமாகக் கையாண்டதாக அவர் குறிப்பிட்டார்.
பயணிகள் மாற்று விமானம் மூலம் பயணத்தைத் தொடருவர் என்று விமான நிறுவனம் கூறியது.