Images
  • Delta Airlines Nosedive
    (படம்: Reuters)

விமானத் துறையில் பெண்களின் ஆர்வத்தை வளர்க்க ஒரு புது முயற்சி


அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டியிலிருந்து (Salt Lake City) ஹியூஸ்ட்டனுக்கு (Houston) ஒவ்வொரு நாளும் Delta Airlines விமானச் சேவைகள் உள்ளன.

ஆனால் கடந்த வாரம் வித்தியாசமான விமானப் பயணம் ஒன்றிற்கு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்ததாக CNN தெரிவித்தது.

NASAவின் ஜான்சன் (Johnson) விண்வெளி நிலையத்திற்கு 120 இளம் பெண்களை அழைத்து சென்றது விமான நிறுவனம்.

அந்தப் பெண்கள் 12இலிருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

அனைத்துலக விமானத்துறைக்குப் பங்களித்துள்ள பெண்களைக் கொண்டாடும் நாளை முன்னிட்டு Delta Airlines அந்த ஏற்பாட்டை செய்தது.

CNN தகவல்படி, அந்தப் பெண்கள் அனைவரும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் முன்னணி வகிக்கும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள்.

அதிக ஆண்கள் இருக்கும் விமானத்துறையில் ஈடுபட பெண்களை ஊக்குவிப்பது Delta Airlines நிறுவனத்தின் நோக்கம்.

விமானத்தைச் செலுத்திய விமானி, அதில் பணியாற்றிய ஊழியர்கள், கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்த ஊழியர்கள் என அன்று அனைத்து பணிகளிலும் பெண்கள் மட்டுமே பணிபுரிந்தனர். 

Top