Images
  • sanofi
    (படம்: REUTERS/Philippe Wojazer/File Photo)

டெங்கிக் காய்ச்சலுக்கு எதிரான தடுப்பூசி பெற்ற பிள்ளைகளுக்கு அபாயம்

டெங்கிக் காய்ச்சலுக்கு எதிரான சனோஃபி (Sanofi) தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட பிள்ளைகளுக்கு, அந்தக் காய்ச்சல் ஏற்படுவதற்கான அபாயம் மேலும் அதிகமாக உள்ளதாய், ஆய்வு ஒன்று கூறுகிறது.

பிலிப்பீன்சில் சுமார் 800 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு அந்தத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

கொசுக்கால் பரவும் அந்தக் கிருமியால் பாதிக்கப்படாத பிள்ளைகளைக் காட்டிலும், அந்தத் தடுப்பூசியைப் பெற்ற பிள்ளைகளுக்குக் கடுமையான டெங்கிக் காய்ச்சல் ஏற்படக்கூடிய அபாயம் அதிகரிப்பதாகத் ஆய்வு கூறுகிறது.

New England Journal of Medicine சஞ்சிகையில் ஆய்வு வெளியிடப்பட்டிருக்கிறது.

உங்கள் கருத்து

Top