Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பாலியல் உறவு மூலம் பரவும் டெங்கி தொற்று

உலகில் முதன் முதலாகப், பாலியல் உறவின் மூலம் டெங்கித் தொற்றுப் பரவல் ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பாலியல் உறவு மூலம் பரவும் டெங்கி தொற்று

(படம்: MAURO PIMENTEL / AFP)


உலகில் முதன் முதலாகப், பாலியல் உறவின் மூலம் டெங்கித் தொற்றுப் பரவல் ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஸ்பெயினில் 41 வயது ஆடவர், மற்றோர் ஆடவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டதில் டெங்கித் தொற்றுப் பரவியதாக உறுதிசெய்யப்பட்டது.

அவ்விருவரில் ஒருவருக்குக் கியூபாவில் கொசுக் கடியின் மூலம் டெங்கி தொற்று ஏற்பட்டது.

அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆடவர், டெங்கித் தொற்று இருக்கும் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவில்லை. இருப்பினும் அவரிடம் டெங்கி அறிகுறிகளைக் கண்டபோது மருத்துவர்கள் வியந்தனர்.

பின்னர் இருவரின் விந்தணுக்களைப் பரிசோதனை செய்ததில் கியூபாவில் காணப்படும் டெங்கித் தொற்று இருவருக்கும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு முன்னர், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பாலியல் உறவு காரணமாகத் தென்கொரியாவில் டெங்கித் தொற்று பரவியிருந்ததாக நம்பப்பட்டது.





 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்