Images
  • vaccine (8)
    (படம்: AFP)

டென்மார்க்கிடமிருந்து 500,000 COVID-19 தடுப்பூசிகளை வாங்கியுள்ள நியூஸிலந்து

நியூஸிலந்தில் அதிகரிக்கும் நோய்ப்பரவலுக்கு இடையே, அந்நாட்டுஅரசாங்கம் 500,000 தடுப்பூசிகளை டென்மார்க்கிடமிருந்து வாங்கியுள்ளது.

அடுத்த சில நாட்களில் புதிய தடுப்பூசிகள் அங்கு சென்றுசேரும் என்று தெரிவிக்கப்பட்டது.

நியூஸிலந்தில் போதுமான அளவு தடுப்பூசி இருப்பதாக, அந்நாட்டுப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern) தெரிவித்தார்.

அனைவரும் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இன்று ஆக்லந்தில் 20 பேருக்கு உள்ளூர் அளவில் கிருமி தொற்றியுள்ளது.

ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில் பதிவான சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு சுமார் 600 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆக்லந்தில் சுமார் 1.7 மில்லியன் பேர் கடுமையான முடக்கநிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், நாட்டின் ஏனைய பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. 

Top