Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சிகிச்சையின்போது தொண்டையில் சிக்கிய பொய்ப்பல்

அறுவை சிகிச்சைக்குச் சென்ற 72 வயது பிரிட்டிஷ் ஆடவர் ஒருவர் தாம் பொய்ப்பல் அணிந்திருந்ததை மருத்துவர்களிடம் சொல்லத் தவறிவிட்டார்.

வாசிப்புநேரம் -

அறுவை சிகிச்சைக்குச் சென்ற 72 வயது பிரிட்டிஷ் ஆடவர் ஒருவர் தாம் பொய்ப்பல் அணிந்திருந்ததை மருத்துவர்களிடம் சொல்லத் தவறிவிட்டார்.

அந்த மறதிக்கு அவர் கொடுத்த விலை அதிகம்.

வயிற்றில் கட்டியை அகற்றிய ஆறு நாள்களுக்குப் பிறகு மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார் அவர்.

வாயில் ரத்தம் வருவதாகவும், உணவை விழுங்கும்போது வலி எற்படுவதாகவும் உணவு உண்ண முடியாமல் அவதியுற்றதாகவும் அவர் கூறினார்.

சுவாசப் பாதையில் தொற்று ஏற்பட்டிருக்கக் கூடுமென நம்பிய மருத்துவர்கள் அவருக்கு மருந்து கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

இரண்டு நாள்கள் கழித்து வலி பொறுக்க முடியாமலும் மூச்சுத் திணறல் காரணமாகவும், மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்பினார் அவர்.

இம்முறை மருத்துவருக்கு ஏதோ சந்தேகம் ஏற்படவே, மூக்குத் துளை வழியாக நுண்ணிய கேமராவை அனுப்பிச் சோதித்தார்.

மருத்துவர் சந்தேகப்பட்டது சரியானது.

ஆடவரது தொண்டையில் பொய்ப்பல் சிக்கி இருந்தது தெளிவாகத் தெரிந்தது.

அரைவட்ட வடிவிலான தகடு, குரல்வளையில் சிக்கியிருந்தது.

பொது அறுவை சிகிச்சை நடந்தபோது தமது பொய்ப்பல் காணாமற்போனதை மருத்துவர்களிடம் சொன்னார் ஆடவர்.

பொய்ப் பற்களைத் தாங்கிப் பிடிக்கும் மேல்தகடும், மூன்று முன்புறப் பொய்ப் பற்களும் உடலுக்குள் போனதை உணர்ந்தார் ஆடவர்.

பொய்ப்பல் அகற்றப்பட்டும் அதனால் எற்பட்ட சிக்கல்களால் சுமார் மூன்று வாரம் மருத்துவமனைக்குத் திரும்பும் நிலை ஆடவருக்கு ஏற்பட்டது.

ஆனால், இது மிக அரிதான சம்பவம் அல்ல என்கின்றனர் மருத்துவர்கள்.

கடந்த 15 ஆண்டுகளில் இத்தகைய பொய்ப்பல் விழுங்கும் சம்பவங்கள் 83 முறை நடந்துள்ளதை அவர்கள் சுட்டினர்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்