Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

நியூயார்க் பங்குச் சந்தையிலிருந்து விலகவுள்ள சீனாவின் Didi Global நிறுவனம்

சீனாவின், Didi Global நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையிலிருந்து விலகவிருக்கிறது.

வாசிப்புநேரம் -
நியூயார்க் பங்குச் சந்தையிலிருந்து விலகவுள்ள சீனாவின் Didi Global நிறுவனம்

(படம்: AP Photo/Ng Han Guan)

சீனாவின், Didi Global நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையிலிருந்து விலகவிருக்கிறது.

அது ஹாங்காங் பங்குச் சந்தையில் கால்பதிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

Weibo இணையத் தளத்தில் Didi அதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதனால், அந்தத் தொழில்நுட்ப நிறுவனத்தின் எதிர்காலம் குறித்துக் கேள்வி எழுந்துள்ளது.

இந்த ஆண்டு ஜூனில் Didi அமெரிக்கப் பங்குச் சந்தையில் அடியெடுத்து வைத்தது.

பிறகு சில நாளில் சீன இணைய ஒழுங்குமுறை ஆணையம் அந்த நிறுவனத்தின்மீது விசாரணையைத் தொடங்கியது.

தேசியப் பாதுகாப்பையும் பொதுநலனையும் பாதுகாக்க விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

-Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்