Images
  • fossil
    கோப்புப்படம்

69 மில்லியன் ஆண்டு பழமையான டைனோசார் எலும்பைக் கண்டுபிடித்த சிறுவன்

கனடாவின் அல்பர்ட்டா பிரதேசத்தில் 12 வயது சிறுவன் டைனோசார் புதைபடிம எலும்புத் துண்டைக் கண்டுபிடித்துள்ளான்.

நேதன் ரஷ்கின் என்ற அந்தச் சிறுவனுக்குத் தொல்பொருள் ஆய்வாளர் (Paleontologist) ஆக வேண்டும் என்று விருப்பம்.

தந்தையுடன் தொல்பொருள் பாதுகாப்புத் தளத்தில் நடந்துசென்றுகொண்டிருந்த நேதன், வாத்துப் போன்ற வாய்ப்பகுதி கொண்ட ஹட்ரோசார் (Hadrosaur) என்ற டைனோசாரின் முன்னங்கால் பகுதி எலும்பைக் கண்டுபிடித்தான்.

அது சுமார் 69 மில்லியன் ஆண்டு பழமையானது என்று நம்பப்படுகிறது.

நேதனும் அவனுடைய தந்தையும் புதைபடிமத்தின் படத்தை Royal Tyrrell தொல்பொருள் அரும்பொருளகத்திற்கு அனுப்பினர்.
அதன் தரம் உறுதி செய்யப்பட்ட பிறகு, தொல்பொருள் ஆய்வாளர்கள் அங்கு அனுப்பப்பட்டனர்.

ஹட்ரோசார் எலும்புத்துண்டு கண்டுபிடிக்கப்பட்டது அது வாழ்ந்த காலகட்டத்தில் அல்பர்ட்டாவில் வாழ்ந்த விலங்குகளைப் பற்றிய தகவல் பெற உதவும் என்று அரும்பொருளக மேற்பார்வையாளர் குறிப்பிட்டார்.

Top