Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தாய்லந்தில் மீண்டும் புதுபிக்கப்பட்டு ஏற்றுமதியாகும் பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கையுறைகள்...

தாய்லந்தில் மில்லியன் கணக்கான பயன்படுத்தப்பட்ட பழைய மருத்துவக் கையுறைகள், புதியன போல் மாற்றப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

வாசிப்புநேரம் -

தாய்லந்தில் மில்லியன் கணக்கான பயன்படுத்தப்பட்ட பழைய மருத்துவக் கையுறைகள், புதியன போல் மாற்றப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

அத்தகைய மோசடி வேலையில் ஈடுபட்ட தொழிற்சாலையில் தாய்லந்துச் சுகாதார அதிகாரிகள், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம், திடீர்ச் சோதனை நடத்தினர்.

அங்கிருந்த குப்பைப் பைகளில் ஏராளமான பயன்படுத்தப்பட்ட மருத்துவக் கையுறைகள் காணப்பட்டன. அவற்றில் சிலவற்றில் ரத்தமும் அழுக்கும் இருந்தது தெரியவந்தது.

அதைப் போன்ற பல தொழிற்சாலைகள் தாய்லந்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. அவை தற்போதும் செயல்பாட்டில் உள்ளதாக CNN செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

கிருமிப்பரவல் சூழலில், பற்றாக்குறை நிலவும் காலத்தில், கையுறைகள் மேலும் தேவைப்படும் என்று கருதி அத்தகைய வர்த்தகங்கள் செயல்படுகின்றன.

அவற்றைத் தயார் செய்யும் தொழிற்சாலைகள், பயன்படுத்தப்பட்ட பழைய கையுறைகளைப் புதுப்பித்துப் பெட்டிகளில் அடுக்கி, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அனுப்புகின்றன.

அத்தகைய நடவடிக்கைகளை நிறுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருவதாகத் தாய்லந்து உணவு, மருந்து ஆணையம், CNN செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்