Images
  • food1
    (படம்: AFP/Jonathan Nackstrand)

சுவீடன்: அருவருப்பான உணவுப் பொருள் அரும்பொருளகம் - தேள் ஓட்கா...மனித மலத்திலிருந்து வைன்... காட்சிக்கு!

சுவீடனின் மல்மோ (Malmo) நகரில் உள்ள அருவருப்பான உணவுப் பொருள் அரும்பொருளகத்தில் தேள் ஓட்கா, மலம் கலந்த வைன் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

புதிதாக அமைக்கப்பட்ட அந்த அரும்பொருளகத்தின் சில பிரபலக் காட்சிப் பொருள்களில் அவையும் அடங்கும்.

மஞ்சள் நிறத்தில் காணப்படுவது மனித மலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட வைன்.

அது கொரியாவில் ஒரு பாரம்பரிய மருந்து.

எலும்பு உடைதல், காயங்கள் ஆகியவற்றைக் குணப்படுத்த அது பயன்படுத்தப்பட்டது.

ஆனால், இப்போது மக்கள் அதைக் குடிப்பதில்லை.

அதனால், அதைத் தாமே தயாரித்து அரும்பொருளகத்தில் காட்சிக்கு வைத்ததாகக் கூறினார் அதன் இயக்குநர்.

55 விழுக்காடு மது கொண்ட பானத்தை பதப்படுத்தப்பட்ட அணிலின் உடலுக்குள் ஊற்றி விற்கப்படும் ஸ்காட்லந்து பீர், கசப்பான மூலிகை மதுபானமான இத்தாலியின் Fernet Branca ஆகியவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

மதுபானம் குடிப்பதில் உள்ள கலாசார வேறுபாடுகளை வருகையாளர்களுக்குக் கண்காட்சி உணர்த்துகிறது.

ஓர் ஊரில் விரும்பி அருந்தப்படும் மதுபானம் வேறோர் ஊரில் அருவருப்பாகக் கருதப்படலாம். அத்தகைய சில பானங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சி 3 மாதங்களுக்குத் நீடிக்கும். 

Top