Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Disney World செல்லாமல் சேமித்த பணத்தில் உணவு வாங்கி தந்த சிறுவன்

அமெரிக்கா: 6 வயது ஜர்மேன் பெல் (Jermaine Bell) தன்னுடைய 7வது பிறந்தநாளைக் கொண்டாட Disney World கேளிக்கை பூங்காவிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்.

வாசிப்புநேரம் -
Disney World செல்லாமல் சேமித்த பணத்தில் உணவு வாங்கி தந்த சிறுவன்

(படம்: AFP)

அமெரிக்கா: 6 வயது ஜர்மேன் பெல் (Jermaine Bell) தன்னுடைய 7வது பிறந்தநாளைக் கொண்டாட Disney World கேளிக்கை பூங்காவிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்.

தன்னுடைய குடும்பத்தினரையும் அழைத்து செல்வதற்காக பெல் பணத்தைச் சேமித்து வைத்திருந்தார்.

ஆனால், அதற்குப் பதிலாக டொரியான் சூறாவளியிலிருந்து தப்பித்தவர்களுக்கு
இலவச உணவு, தண்ணீர் அளிக்க அவரது பணத்தைப் பயன்படுத்தியுள்ளார் பெல்.

தொழிலாளர் தினத்தன்று முதல்முறையாக 'hot dogs' எனப்படும் இறைச்சி வகை உணவை இலவசமாக கொடுக்க தொடங்கினார் பெல்.

அன்று சூறாவளியிடமிருந்து தப்பி அவ்வழியே சென்ற 100 பேருக்கு இலவச 'hot dogs' கொடுத்தார் பெல்.

சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைவரும் வயிராற சாப்பிடும்வரை இவ்வாரம் முழுதும் 'hot dogs' பரிமாற திட்டமிட்டுள்ளார் பெல்.

இருப்பினும் Disney World செல்லும் கனவை பெல் இன்னும் கைவிடவில்லை. வேறொரு பிறந்தநாளுக்கு அங்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்