Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க Disneyland ஓராண்டுக்குப் பிறகு திறக்கப்பட்டது

2 வயதுக்கு மேற்பட்ட சிறார், முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

வாசிப்புநேரம் -
அமெரிக்க Disneyland ஓராண்டுக்குப் பிறகு திறக்கப்பட்டது

(படம்:AP)

அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள டிஸ்னிலேண்ட் (Disneyland) பொழுதுபோக்குத் தலம், சுமார் ஓராண்டுக்குப் பிறகு முதன்முறையாக நேற்று திறக்கப்பட்டது.

இருப்பினும், கிருமித்தொற்றுக் கட்டுப்பாடுகளால் டிஸ்னிலேண்ட்டுக்குள் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை 25 விழுக்காட்டுக்குக் குறைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு இடைவெளியைக் கடைப்பிடிக்க, அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 வயதுக்கு மேற்பட்ட சிறார், முகக்கவசம் அணிவது கட்டாயமாகும்.

அதோடு இம்முறை மிக்கி மௌஸ், ஸ்னோ ஒயிட் (Mickey Mouse, Snow White) போன்ற டிஸ்னி கதாபாத்திரங்களைக் கட்டி அணைக்க அனுமதியில்லை.

டிஸ்னிலேண்டின் சில பகுதிகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அணிவகுப்புகளும், இரவுநேர வாண வேடிக்கை நிகழ்ச்சிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

டிஸ்னிலேண்ட் நுழைவுச்சீட்டுகள் ஜூன் மாத நடுப்பகுதிவரை விற்றுத் தீர்ந்துவிட்டன.     

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்