Images
அமெரிக்கா: பெரிய அளவிலான COVID-19 தடுப்பு மருந்து செலுத்தும் தளமாகவுள்ள Disneyland
அமெரிக்காவின் கலிஃபோர்னியா (California) மாநிலத்தின் முதல் ஆகப் பெரிய COVID-19 தடுப்பு மருந்து செலுத்தும் தளமாக Disneyland கேளிக்கைப் பூங்கா அறிவிக்கப்பட்டுள்ளது.
Walt Disney நிறுவனத்திற்குச் சொந்தமான அந்தக் கேளிக்கைப் பூங்கா, சென்ற ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளது.
ஆரெஞ்சு கவுண்டி (Orange County) வட்டாரத்திற்குத் தடுப்பு மருந்து விநியோகிக்க, இந்த வாரம் முதல் Disneyland பூங்கா மீண்டும் செயல்படத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அங்கு ஆக அதிகமானோரை வேலைக்கு எடுக்கும் Disneyland Resort, அந்த வட்டாரத்தின் தடுப்பு மருந்து விநியோகத்தில் பெரிய பொறுப்பை எடுத்திருப்பதாக அதன் மேலாளர் குறிப்பிட்டார்.
ஆரெஞ்சு கவுண்டிக்கு உதவுவதில் பெருமிதம்கொள்வதாக Disney பூங்காவின் மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.