Images
  • divorce
    (படம்: Pixabay)

குளிக்காத கணவருடன் வாழ விருப்பமில்லை : விவாகரத்துக் கோரும் இந்தியப் பெண்


விவாகரத்துக் கோர பல காரணங்கள் இருக்கலாம்.

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் 23 வயதுப் பெண் தன் கணவர் சுமார் ஒருவாரத்துக்குக் குளிக்கவில்லை; தாடியை மழித்துக்கொள்ளவில்லை என்ற காரணத்தை முன்வைத்து விவாகரத்துக் கேட்டுள்ளார்.

கடந்த ஆண்டு திருமணமான அந்தத் தம்பதி அடுத்த ஆறு மாதத்துக்குப் பிரிந்து வாழ வேண்டும் என்று போபால் குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து விவாகரத்து வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவாகரத்துக்கு 25 வயதுக் கணவரும் ஒப்புக்கொண்டதாக நீதிமன்ற ஆலோசகர் தெரிவித்தார்.

துர்நாற்றம் காரணமாக மனைவி குளிக்கச் சொல்லும்போதெல்லாம் கணவர் வாசனைத் திரவியத்தைப் பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் எனப் பெண்ணைக் கேட்டுக்கொண்டதாகக் குடும்பத்தினர் கூறினர்.

இருப்பினும் விவாகரத்து வேண்டும் என்று பெண் பிடிவாதமாய் இருக்கிறார் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். 

Top