Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'அமசான் காடுகள் அழிக்கப்படுவது உலக அழிவுக்கு இட்டுச் செல்லும்'

அமசான் காடுகள் அழிக்கப்படுவது உலக அழிவுக்கு இட்டுச் செல்லும் என அமசான் பழங்குடியினர் அமைப்புகளின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -

அமசான் காடுகள் அழிக்கப்படுவது உலக அழிவுக்கு இட்டுச் செல்லும் என அமசான் பழங்குடியினர் அமைப்புகளின் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

COP26 பருவநிலை மாற்ற மாநாட்டில் கூடவுள்ள வளர்ச்சியடைந்த நாடுகள், அமசான் காடுகளைப் பாதுகாக்கப் பழங்குடியினருடன் இணைந்து செயல்படுமாறு திரு கிரெகோரியோ மிராபெல் (Gregorio Mirabel) கேட்டுக்கொண்டார்.

பிரேசில், பொலிவியா, பெரு, இக்குவடோர், கொலம்பியா, வெனிசுவேலா, குயானா, சுரினாம், பிரெஞ்சு குயானா ஆகியவற்றில் உள்ள அமசான் பழங்குடியினருக்கான பிரதிநிதிகளில் அவரும் ஒருவர்.

அமசான் காடுகள் ஏற்கனவே 17 விழுக்காடு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காடுகளின் அழிவு 20 விழுக்காட்டை எட்டினால், அதிலிருந்து மீண்டு வருவது மிகக் கடினம் என்பதையும் அவர் சுட்டினார்.

நாட்டைப் பாதுகாப்பதற்குப் பணம் செலவழிப்பது போல காட்டைப் பாதுகாக்கவும் செலவுசெய்யுமாறு உலகத் தலைவர்களைத் திரு. மிராபெல் கேட்டுக்கொண்டார்.

தற்போதைய நிலையில், அமசான் காடுகளைக் காப்பதற்கான நிதியுதவி குறித்துத் தெளிவு இல்லை என்பதையும் அவர் எடுத்துக்காட்டினார்.

உலகின் சுத்தமான, இயற்கையான குடிநீர் வளங்களில் ஆகப் பெரியது அமசான் காட்டில் உள்ளது. அதனைப் பாதுகாப்பதன் மூலம், உலகின் பருவநிலையை மேம்படுத்தலாம்.

அமசான் காடுகளில் உள்ள ஒவ்வொரு மரமும், காற்றைச் சுத்திகரிக்கக்கூடியது. அத்தகைய காடுகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைத் திரு. மிராபெல் வலியுறுத்தியுள்ளார்.

- AFP/ic 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்