Images
  • Dog Cabin (1)
    (படம்: June Lara/ Facebook) 

விமானப் பயணத்தின்போது மாண்ட நாய்... காரணம் என்ன?

நியூயார்க்: யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண்ணின் நாய் இருக்கையின் மேல் பைகளை வைக்கும் இடத்தில் அடைக்கப்பட்டதால் மாண்டது. அதற்கு முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக நிறுவனம் கூறியது.

ஹுஸ்டனிலிருந்து (Houston) நியூயார்க்கிற்குப் (New York) சென்று கொண்டிருந்த விமானத்தில் தமது பிள்ளைகளுடனும், செல்ல நாயுடனும் பயணம் செய்தார் ஒரு பெண். நாயைத் தமது இருக்கைக்கு அடியில் வைத்துக்கொள்ள விரும்பினார் பெண்.

ஆனால், விமானத்தில் பயணிகள் தங்கள் பைகளை வைக்கும் இடத்தில் நாயையும் வைக்கச் சொல்லி பணிப்பெண் ஒருவர் வற்புறுத்தியிருக்கிறார். மூன்றரை நேரப் பயணத்திற்குப் பிறகு நாய் இறந்து கிடந்ததைக் கண்ட பெண் தரையில் உட்கார்ந்து அழுததாக சக பயணிகள் கூறினர்.

இந்தத் துயரச் சம்பவம் வருத்தத்துக்குரியது என்று யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

பெண்ணுடைய குடும்பத்தினரின் விமானப் பயணச்சீட்டுக் கட்டணம் அவரிடம் திருப்பிக்கொடுக்கப்பட்டுள்ளது. யுனைட்டட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மிருகங்களைக் கையாளும் முறை இவ்வாறு சிக்கலில் முடிந்திருப்பது முதல் முறை அல்ல.

கடந்த ஆண்டு, யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒரு முயல் மாண்டதைத் தொடர்ந்து அதன் உரிமையாளர்கள் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர்.
 

உங்கள் கருத்து

Top