Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

முதலையின் பிடியிலிருந்து நாய்க்குட்டியைக் காப்பாற்றிய தைரியமான ஆடவர்

முதலையின் பிடியிலிருந்து நாய்க்குட்டியைக் காப்பாற்றிய தைரியமான ஆடவர்

வாசிப்புநேரம் -
முதலையின் பிடியிலிருந்து நாய்க்குட்டியைக் காப்பாற்றிய தைரியமான ஆடவர்

படம்: PIXABAY

செல்லப்பிராணிகள் மீது காட்டும் அன்புக்கு எல்லையே இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறார் அமெரிக்காவின் புளோரிடா (Florida) மாநிலத்தைச் சேர்ந்த ஓர் ஆடவர்.

தமது உயிரைப் பற்றி சற்றும் எண்ணாமல், நாய்க்குட்டியை முதலையிடமிருந்து காப்பாற்றியுள்ளார் அவர்.

அது குறித்து CNN செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ரிச்சர்ட் வில்பாங்ஸ் (Richard Wilbanks) தம்முடைய நாயுடன் வீட்டின் பின்புறத்தில் உள்ள குளத்திற்கு அருகே நடந்துகொண்டிருந்தார்.

அப்போது, ஒரு முதலை திடீரென்று குளத்தின் ஓரத்தில் இருந்த நாயைத் தாக்கியது.

அதன் வாயில் நாய்க்குட்டி சிக்கியது.

அதைக் கவனித்த வில்பாங்ஸ், சற்றும் தயங்காமல் குளத்திற்குள் குதித்தார்.

அவர் முதலையின் வாயைத் திறந்து நாய்க்குட்டியைக் காப்பாற்றினார்.

வில்பாங்ஸின் துணிவுமிக்க செயல் கண்காணிப்புக் கேமராக்கள் வழி பதிவுசெய்யப்பட்டது.

முதலையைக் குளத்திலிருந்து அகற்ற விரும்பவில்லை என்று ஆடவர் கூறியுள்ளார்.

இயற்கையின் ஒரு பகுதியான விலங்குகள் மனித வாழ்விலும் ஒரு பகுதி என்று அவர் சொன்னார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்