Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஒரே நாளில் கொல்லப்பட்ட 1,400 டால்ஃபின்கள் .. எங்கே? ஏன்?

ஃபாரோ தீவுகளில், ஒரே நாளில் 1,400க்கும் மேற்பட்ட டால்ஃபின்கள் (dolphin) கொல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

வாசிப்புநேரம் -

ஃபாரோ தீவுகளில், ஒரே நாளில் 1,400க்கும் மேற்பட்ட டால்ஃபின்கள் (dolphin) கொல்லப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

டால்ஃபின்களை வேட்டையாடும் பாரம்பரியம் அங்கு பல நூறு ஆண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்தாலும், ஒரே நாளில் அத்தனை டால்ஃபின்கள் இதுவரை கொல்லப்பட்டதில்லை என்று BBC செய்தி நிறுவனம் கூறியது.

படகுகளால் Skalabotnur கடற்கரையின் தாழ்வான பகுதிக்குத் துரத்தப்பட்ட டால்ஃபின்கள், பின்னர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டன.

அவற்றின் ரத்தம், தண்ணீரைச் செந்நீராக்கியது.

கொல்லப்பட்ட டால்ஃபின்கள் உள்ளூர்வாசிகளின் பயன்பாட்டுக்காக விநியோகிக்கப்பட்டன.

ஆண்டுதோறும், சராசரியாக 600 திமிங்கிலங்களும் குறைந்த அளவு டால்ஃபின்களுமே பிடிக்கப்படுவதாக ஃபாரோ அரசாங்கம் கூறியது.

அந்த வழக்கம், தங்கள் கலாசார அடையாளம் என்றும், நீடித்து நிலைத்திருக்கும் வகையில் உணவு பெற அது உதவுவதாகவும் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

எனினும், அது தேவையற்ற வழக்கம் என்றும் கொடூரமான செயல் என்றும் விலங்குநல ஆர்வலர்கள் குறைகூறுகின்றனர்.

இதற்கிடையே, இம்முறை 1,400க்கும் மேற்பட்ட டால்ஃபின்கள் கொல்லப்பட்டது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக BBC சொன்னது.

ஆனால், உள்ளூர் அதிகாரிகளின் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் சட்டங்கள் மீறப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்