Images
  • brazil PM
    பிரேசில் அதிபர் ஜாயிர் பொல்ஸோனாரோ (Jair Bolsonaro). கோப்புப் படம்: REUTERS/Adriano Machado 

COVID-19 - "பயப்பட ஏதுமில்லை" பிரேசில் அதிபர்

பிரேசிலில் கிட்டத்தட்ட அனைவருமே கிருமித்தொற்றால் பாதிக்கப்படுவர் என்றும் மக்கள் அதனை தைரியமாக எதிர்கொள்ளவேண்டும் என்றும் அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சோனாரோ (Jair Bolsonaro) கூறியுள்ளார்.

கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்த சில நாள்களில் திரு. போல்சோனாரோ அவ்வாறு சொன்னார்.

3 வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்ட அவர், தம்முடைய அனுபவத்தை உதாரணமாகச் சுட்டினார்.

"நான் எளிதில் கிருமி தொற்றும் ஆபத்து உள்ளோரின் பிரிவில் உள்ளேன். நான் என்றாவது ஒரு நாள் நோயால் பாதிக்கப்படுவேன் என்று எனக்குத் தெரியும். அனைவரும் ஒரு நாள் பாதிக்கப்படவுள்ளனர். என்ன பயம்? அதை எதிர்கொள்ளுங்கள்" என்று அவர் கூறினார்.

கிருமித்தொற்றால் நேர்ந்த மரணங்களை எண்ணி வருந்துவதாகக் கூறிய திரு. போல்சோனாரோ, மக்கள் தினமும் பல்வேறு காரணங்களால் மரணமடைகின்றனர் என்றும் அது இயற்கை என்றும் சொன்னார்.

நாட்டில் கிருமித்தொற்றைக் கையாளும் விதம் குறித்து, அவர் குறைகூறலை எதிர்நோக்கி வருகிறார்.

உலகில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

2.6 மில்லியனுக்கும் மேற்பட்டோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்; 92,000 பேர் மாண்டனர்.

Top