Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்க அதிபரின் மூத்த மகனுக்குக் கிருமித்தொற்று உறுதி

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மூத்த மகனான திரு. டோனல்ட் டிரம்ப் ஜூனியருக்குக் (Donald Trump Jr) கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் மூத்த மகனான திரு. டோனல்ட் டிரம்ப் ஜூனியருக்குக் (Donald Trump Jr) கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரிடம் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் இல்லை; இந்த வாரத் தொடக்கத்தில் நோய்த்தொற்று உறுதியானதிலிருந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

டிரம்ப் குடும்பத்தில், கிருமித்தொற்றால் பாதிக்கப்படும் 4வது நபர் திரு. டிரம்ப் ஜூனியர்.

இதற்கு முன், அதிபர் டிரம்ப், அவருடைய மனைவி, மகன் பேர்ரன் (Barron) ஆகியோர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தனர்.

இந்நிலையில், அதிபரின் வழக்குரைஞரான ரூடி ஜுலியானியின் (Rudy Giuliani) மகனுக்கும் நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்