Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சுவர்களில் ஒட்டப்பட்ட பணநோட்டுகளை நன்கொடையாகக் கொடுக்கும் உணவகம்

சுவர்கள், தூண்கள், மேற்கூரைகள் என ஒன்றுவிடாமல் பணநோட்டுகளை ஒட்டுவது ஃபுளோரிடாவில் உள்ள ஓர் உணவகத்தில் வழக்கம்.

வாசிப்புநேரம் -
சுவர்களில் ஒட்டப்பட்ட பணநோட்டுகளை நன்கொடையாகக் கொடுக்கும் உணவகம்

(படம்: Facebook/ Siesta Key Oyster Bar)

சுவர்கள், தூண்கள், மேற்கூரைகள் என ஒன்றுவிடாமல் பணநோட்டுகளை ஒட்டுவது ஃபுளோரிடாவில் உள்ள ஓர் உணவகத்தில் வழக்கம்.

டொரியன் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்போது அந்த நோட்டுகள் அனைத்தையும் அது நன்கொடையாகக் கொடுத்துள்ளது.

Siesta Key Oyster Bar என்ற அந்த உணவகத்தில் வாடிக்கையாக வரும் மீனவர்கள் பணநோட்டுகளை முதலில் ஒட்டத் தொடங்கினர் என்று கூறப்பட்டது. ஒருநாள் அவர்களுக்கு மீனே கிடைக்கவில்லை என்றால் அந்தப் பணத்தைப் பயன்படுத்தி பானம் வாங்கிக்கொள்ளலாம் என்பது அதற்குக் காரணம்.

பல ஆண்டுகளாக ஒட்டப்பட்ட ஒரு டாலர் நோட்டுகள் அனைத்தையும் சுவர்களிலிருந்து அகற்ற சுமார் ஒருமாதம் பிடித்தது. உணவகத்திலிருந்து வசூலித்த நோட்டுகளின் மதிப்பு 14,000 டாலர்.

கட்டுக்கட்டாக அடுக்கப்பட்டுள்ள பணநோட்டுகள் பஹாமாஸ் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு அனுப்பிவைக்கப்படும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்