Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கழுதைத் தோல் ஏற்றுமதியைத் தடை செய்ய விலங்கு நலன் ஆர்வலர்கள் கென்யாவிடம் வேண்டுகோள்

கென்யாவில் சீன மருந்துத் தயாரிப்புக்காக கழுதைகளைக் கொல்லும் போக்கிற்குத் தடை விதிக்குமாறு விலங்கு நல ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

வாசிப்புநேரம் -

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

கென்யாவில் சீன மருந்துத் தயாரிப்புக்காக கழுதைகளைக் கொல்லும் போக்கிற்குத் தடை விதிக்குமாறு விலங்கு நல ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

'Ejiao' எனும் சீனப் பாரம்பரிய மருந்தைத் தயாரிப்பதற்காகக் கழுதைத் தோல் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவது, வயதாகும் அறிகுறிகளை மெதுவடையச் செய்வது போன்ற பயன்களை அம்மருந்தின் மூலம் பெறலாம் என்று நம்பப்படுகிறது.

ஆனால் மருந்தைத் தயாரிக்க கென்ய அறுப்புக் கூடங்களில் விலங்குகள் வதைக்கப்படுவதாக விலங்கு நலன் அமைப்பு PETA தெரிவித்துள்ளது.

சீனாவில் கழுதைகளின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளதால் அது ஆப்ரிக்காவிலிருந்து கழுதைகளை இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளது.

கழுதைத் தோல் ஏற்றுமதியைச் சில ஆப்பிரிக்க நாடுகள் தடை செய்துள்ளன.

அங்கு சீன அறுப்புக் கூடங்களும் மூடப்பட்டுள்ளன.

இருப்பினும் மற்ற ஆப்பிரிக்க நாடுகளில் ஆயிரக்கணக்கான கழுதைகள் கொல்லப்படுகின்றன.

இந்நிலை மாறாவிட்டால், இன்னும் நான்கு ஆண்டுகளில் அவ்வட்டாரங்களில் கழுதைகள் அழிந்துவிடும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்