Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஊக்க மருந்து விவகாரம் - 20 மாதத் தடை - ஓய்வை அறிவித்த அமெரிக்க நீச்சல் வீரர்

ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை தங்கம் வென்ற அமெரிக்க நீச்சல் வீரர் கோனர் டியுவர் (Conor Dwyer) ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
ஊக்க மருந்து விவகாரம் - 20 மாதத் தடை - ஓய்வை அறிவித்த அமெரிக்க நீச்சல் வீரர்

(படம்: Reuters)

ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை தங்கம் வென்ற அமெரிக்க நீச்சல் வீரர் கோனர் டியுவர் (Conor Dwyer) ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளார்.

ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதற்காக 20 மாதங்கள் நீச்சலில் பங்கேற்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.

அடுத்த ஆண்டு, தோக்கியோவில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் டியுவர் இன் கனவு அதனால் தகர்ந்தது.

இருபது மாதத் தடை பற்றிய செய்தி வெளியான அதே நாளில் அவர் தமது ஓய்வு பற்றி அறிவித்திருக்கிறார்.

நீச்சல் போட்டிகளின் போது டியுவர் தம் உடலில் டெஸ்ட்டஸ்ட்ரோன் துகள்களைச் செலுத்தியிருந்தது கண்டறியப்பட்டது.

ஆனால், சிகிச்சையின்போது மருத்துவர் பரிந்துரைத்த மருந்தையே தாம் எடுத்துக் கொண்டதாகவும் அதில் தடைசெய்யப்பட்ட பொருள் கலந்திருந்தது பற்றித் தமக்குத் தெரியாது என்றும் டியுவர் கூறுகிறார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்