Images
  • dr wont be deported (1)
    (படம்: change.org)

விசா நிராகரிக்கப்பட்டதால் நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கிய சிங்கப்பூர் மருத்துவர் மீதான வழக்கு கைவிடப்பட்டது

பிரிட்டனில் தங்குவதற்கு வழங்கப்படும் விசா (Visa) நிராகரிக்கப்பட்டதால் நாடுகடத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்கிய சிங்கப்பூர் மருத்துவருக்கு நற்செய்தி.

அவரை பிரிட்டனில் தொடர்ந்து தங்க அனுமதித்த முன்னைய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று, பிரிட்டிஷ் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

பத்தாண்டுகளுக்கு மேல் பிரிட்டனில் வசித்து வரும் டாக்டர் லூக் ஓங், லண்டனில் பொது மருத்துவராகப் பணிபுரிவதற்கான பயிற்சியைப் பெற்றுவருகிறார்.

பயிற்சிக் காலம் முடிவடைய இன்னும் ஐந்து மாதங்களே எஞ்சியுள்ள வேளையில் அவர் நாடுகடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசா விண்ணப்பத்தை 18 நாட்கள் தாமதமாக அனுப்பியதால் அது நிராகரிக்கப்பட்டதாக டாக்டர் ஓங் கூறினார்.

ஆனால், விசாவுக்காக விண்ணப்பிக்க அப்போதுதான் தமக்கு நேரம் ஒதுக்கப்பட்டது என்பதை அவர் சுட்டினார்.

விசா நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்த அவர் அதில் வெற்றியும் பெற்றார்.

ஆனால், பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு அதை நிராகரிக்க விண்ணப்பித்து, இப்போது அதை மீட்டுக்கொண்டுள்ளது. 

Top