Images
  • concert
    படம்: REUTERS/Loren Elliott

ஆஸ்திரேலியா: வாகனத்திலிருந்து நேரடியாகக் கண்டு ரசிக்கும் இசைக் கச்சேரிகள் முன்னோட்டம்

ஆஸ்திரேலியர்கள் வாகனத்தில் அமர்ந்து இசை நிகழ்ச்சிகளை நேரடியாக ரசிக்கும் வாய்ப்பை இன்று பெற்றனர்.

பாதுகாப்பான சமூக இடைவெளி விதிமுறை நடப்பில் உள்ளதால், இப்போதெல்லாம் இசை நிகழ்ச்சிகளுக்குக் கூட்டமாகச் செல்ல முடியாது.

ஆனால் வாகனத்தின்மூலம் அந்த வாய்ப்பைச் சில நிறுவனங்கள் வழங்கத் தொடங்கியுள்ளன. பாதுகாப்பான முறையில் ரசிகர்கள் வாகனத்திலிருந்தவாறே இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பரவசமடையலாம்.

சிட்னியில் இன்று அதுபோன்ற இலவச இசை நிகழ்ச்சியொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

Drive-in Entertainment Australia நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்.

நேரடியாகப் படைக்கப்படும் இசை நிகழ்ச்சியாக மட்டும் இல்லாமல் நாடகம், நகைச்சுவை போன்ற மற்ற கலை அம்சங்களும் இடம்பெற்றன.

Zoom மூலம் நிகழ்ச்சி, கார்களில் இருந்தவர்களுக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

கைதட்டலுக்குப் பதிலாக கார்களின் காற்று ஒலிப்பான்களின் ஓசை கலைஞர்களை உற்சாகப்படுத்தியது.

 

Top