Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

AstraZenecaவின் COVID-19 தடுப்புமருந்துக் கலவை, இறுதிக்கட்டச் சோதனையில் வெற்றி

AstraZeneca வின் COVID-19 தடுப்புமருந்துக் கலவை, இறுதிக்கட்டச் சோதனையில் நல்ல பலன் கொடுத்திருக்கிறது.    

வாசிப்புநேரம் -

AstraZeneca வின் COVID-19 தடுப்புமருந்துக் கலவை, இறுதிக்கட்டச் சோதனையில் நல்ல பலன் கொடுத்திருக்கிறது.

AZD7442 எனும் அந்தத் தடுப்புமருந்துக் கலவை, கடுமையான நோய்த்தொற்றுப் பாதிப்பைப் பெருமளவில் தடுக்கக்கூடியது என்றும் கூறப்படுகிறது.

கிருமித்தொற்றுக்கு ஆளானோர், தொடக்கத்திலேயே தடுப்புமருந்துக் கலவையைப் பயன்படுத்தினால், நோய் கடுமையாகாது என்று நிறுவனம் சொன்னது.

தொடர்ந்து, மேலும் 6 மாதம் அவர்களுக்குத் நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்புக் கிடைக்கும்.

தடுப்புமருந்துக் கலவையின் சோதனைத் தரவுகள் குறித்து, அதிகாரிகளுடன் பேசவிருப்பதாக AstraZeneca கூறியுள்ளது.

இயல்பாகவே COVID-19 எதிர்ப்புசக்தி இல்லாதவர்களுக்கும் தடுப்புமருந்துக் கலவை உதவும் என்றும் நிறுவனம் நம்புகிறது.

தடுப்புமருந்துக் கலவையின் அவசரப் பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்குமாறு AstraZeneca நிறுவனம், அமெரிக்காவிடம் சென்ற வாரம் கேட்டுக்கொண்டது.    

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்