Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சவுரி முடியில் போதைப்பொருள் கடத்தியவர்

சவுரி முடியில் சுமார் அரை கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்துக் கடத்த முயன்ற ஆடவர் பார்சலோனா விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டார்.

வாசிப்புநேரம் -
சவுரி முடியில் போதைப்பொருள் கடத்தியவர்

(படம்: Reuters)

சவுரி முடியில் சுமார் அரை கிலோகிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை மறைத்து வைத்துக் கடத்த முயன்ற ஆடவர் பார்சலோனா விமான நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டார்.

கொலம்பியாவின் பொகோட்டாவிலிருந்து வந்த அந்த ஆடவர் சந்தேகப்படும் வகையில் நடந்துகொண்டதைக் காவல்துறையினர் கண்டனர்.

ஆடவரின் தொப்பிக்கு அடியில் பெரிய அளவிலான சவுரி முடி இருந்ததை அவர்கள் அறிந்தனர். அவரைச் சோதனையிட்டதில் தலையில் 34,000 டாலர் மதிப்புள்ள போதைப்பொருள் பொட்டலம் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

கடந்த ஆண்டு மட்டும் பார்சலோனா விமான நிலையத்தில் 100 கிலோகிராமுக்கும் அதிகமான கொக்கேய்ன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்