Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

மது அருந்திய கங்காருக்களா?

ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் உள்ள விக்டோரியா மாநிலத்தில்,  அதிகமான கங்காருக்கள் மது அருந்தியதுபோல் தள்ளாடி விழுவதாக, வனவிலங்கு மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.   

வாசிப்புநேரம் -

ஆஸ்திரேலியாவின் தென் பகுதியில் உள்ள விக்டோரியா மாநிலத்தில், அதிகமான கங்காருக்கள் மது அருந்தியதுபோல் தள்ளாடி விழுவதாக, வனவிலங்கு மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கங்காருக்கள் தள்ளாடித் தரையில் விழும் காணொளிகள் அதனைப் புலப்படுத்துவதாக அவர்கள் கூறினர்.

ஒரு வாரத்துக்கு அத்தகைய 10 சம்பவங்கள் பற்றிக் காவல்துறைக்குப் புகார் வருவதாகக் கூறப்பட்டது.

Canary grass எனப்படும் ஒருவகைப் புல்லைத் தின்னும் கங்காருக்களின் மூளையில் ஏற்படும் மாற்றமே அதற்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்தப் புல்லைத் தின்றதால் ஏற்படும் அறிகுறிகள் தெளிவாகத் தெரியத் தொடங்கும்போது, கங்காருக்கள் காப்பாற்ற முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டு விடுவதாக விலங்குநல ஆர்வலர்கள் கூறினர்.

அதன் காரணமாக, பாதிக்கப்பட்ட கங்காருக்களை, கருணைக் கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றனர் அவர்கள்.

குறிப்பிட்ட புல்வகையைத் தின்னும் கால்நடைகளும் அதனால் பாதிக்கப்படக் கூடும்.

ஆகவே, அந்தப் புல் மீது cobalt sulfate இரசாயனத்தைத் தெளிக்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைத்தனர்.

புல்லுடன் அந்த இரசாயனம் உடலில் சேரும்போது பாதிப்பு அதிகம் இருக்காது.

ஆனால், மனித நடமாட்டமில்லாத காடுகளுக்குள் அந்தப் புல்லைத் தின்னும் கங்காருக்களைக் காப்பாற்றுவது சாத்தியமல்ல என்றனர் அதிகாரிகள்.    

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்