Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

குள்ளமான ஒட்டகச்சிவிங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன!

உகாண்டாவிலும் நமீபியாவிலும் குள்ளமான ஒட்டகச்சிவிங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
குள்ளமான ஒட்டகச்சிவிங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன!

(படம்: Emma Wells/ Giraffe Conservation Foundation/ Handout via Reuters)

உகாண்டாவிலும் நமீபியாவிலும் குள்ளமான ஒட்டகச்சிவிங்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உயரமாக இருப்பதே ஒட்டகச்சிவிங்கியின் தனிச் சிறப்பு. அது தன் உயரத்தைக் கொண்டு உயரமான மரங்களிலுள்ள இலைகளைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுகிறது.

2018ஆம் ஆண்டில் ஒட்டகச்சிவிங்கிப் பாதுகாப்பு அமைப்புடன் (Giraffe Conservation Foundation) செயல்படும் ஆய்வாளர்கள் நமீபியாவில் 2.6 மீட்டர் உயரம் கொண்ட ஒட்டகச்சிவிங்கியைக் கண்டனர்.

சாதாரண ஒட்டகச்சிவிங்கிகள் 4.5 மீட்டரிலிருந்து 5 மீட்டர் வரையில் வளரக்கூடியவை.

சென்ற ஆண்டு, உகாண்டாவிலுள்ள Murchison Falls வனவிலங்குப் பூங்காவில் அவர்கள் இன்னொரு குட்டையான ஒட்டகச்சிவிங்கியைக் கண்டுபிடித்தனர். அதன் உயரம் 2.8 மீட்டர் மட்டுமே!

அதன் தொடர்பிலான அவர்களின் ஆய்வு பிரிட்டிஷ் மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டது.

இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளின் கழுத்து நீளமாக இருந்தது. ஆனால் அவற்றின் கால்கள் குட்டையாகவும் தசைப்பிடிப்பாகவும் இருந்தன.

குள்ளமாக இருப்பதில் ஒட்டகச்சிவிங்கிகளுக்கு நன்மை இல்லை எனக் கூறப்பட்டது.

குள்ள ஒட்டகச்சிவிங்கிகளால் மற்ற சாதாரண ஒட்டகச்சிவிங்கிகளுடன் சேர்ந்து இனப்பெருக்கம் முடியாது என்றும் கருதப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்