Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகிலேயே ஆக அதிக வருமானம் ஈட்டும் நடிகர்

உலகிலேயே ஆக அதிக வருமானம் ஈட்டும் ஆண் நடிகர்களின் Forbes பட்டியலில் ஹாலிவுட் நடிகர் டுவைன் "The Rock" ஜான்சன் (Dwayne Johnson) முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
உலகிலேயே ஆக அதிக வருமானம் ஈட்டும் நடிகர்

(கோப்புப் படம்: Vianney Le Caer/Invision/AP)

உலகிலேயே ஆக அதிக வருமானம் ஈட்டும் ஆண் நடிகர்களின் Forbes பட்டியலில் ஹாலிவுட் நடிகர் டுவைன் "The Rock" ஜான்சன் (Dwayne Johnson) முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக, அவர் அந்த இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.

முன்னாள் மல்யுத்த வீரரான அவர், கடந்த ஆண்டு ஜூன் முதல் தேதிக்கும் இவ்வாண்டு ஜூன் முதல் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் 87.5 மில்லியன் டாலர் சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.

Netflix-இல் வெளியிடப்பட்ட Red Notice எனும் திரைப்படத்திலிருந்து மட்டும் அவர் 23.5 மில்லியன் டாலர் ஈட்டியதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

பட்டியலின் முதல் 10 இடங்களில், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரும் இடம்பெற்றுள்ளார்.

6-ஆம் இடத்தைப் பிடித்த அவர், ஓராண்டு காலத்தில் 48.5 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டியுள்ளார்.

அவருடைய வருமானத்தில் பெரும் பகுதி, விளம்பர ஒப்பந்தங்களில் இருந்து கிடைத்ததாக BBC கூறியது.

பட்டியலில் இடம்பிடித்த மற்ற நடிகர்கள்...

இரண்டாம் இடம் - நடிகர் ராயன் ரெனால்ட்ஸ் (Ryan Reynolds): 71.5 மில்லியன் டாலர் வருமானம்

மூன்றாம் இடம் - நடிகரும் தயாரிப்பாளருமான மார்க் வால்பர்க்: 58 மில்லியன் டாலர் வருமானம்

நன்காம் இடம் - நடிகர் பென் அஃப்லெக் (Ben Affleck): 55 மில்லியன் டாலர் வருமானம்

ஐந்தாம் இடம் - நடிகர் வின் டீசல் (Vin Diesel): 54 மில்லியன் டாலர் வருமானம்

வில் ஸ்மித் (Will Smith), ஜாக்கி சான் ஆகியோரும் பட்டியலில் இடம்பிடித்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்