Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

4,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய EasyJet ஏர்லைன்ஸ் திட்டம்- விமானிகள் சங்கம் கண்டனம்

பிரிட்டனின்  மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனமான EasyJet ஏர்லைன்ஸ், 4,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
4,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய EasyJet ஏர்லைன்ஸ் திட்டம்- விமானிகள் சங்கம் கண்டனம்

(படம்: REUTERS/Stefano Rellandini/Files)

பிரிட்டனின் மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனமான EasyJet ஏர்லைன்ஸ், 4,500 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

COVID-19 நோய்ப் பரவலால் விமானச் சேவைகளுக்கான தேவை குறைந்துள்ளது. ஆட்குறைப்புக்கு அது காரணமாகச் சொல்லப்பட்டது.

ஆட்குறைப்பு அறிவிப்பையடுத்து, விமானிகள் சங்கமான Balpa அதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.

EasyJet நிறுவனம் அடுத்த மாதம் 15ம் தேதி விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளது.

அது மார்ச் மாதம் அதன் அனைத்துச் சேவைகளையும் நிறுத்தியது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சுமார் 15,000 பேரை EasyJet ஏர்லைன்ஸ் பணியமர்த்தியது.

சென்ற ஆண்டு விமானத்துறை கண்ட வளர்சிசியை, 2023ம் ஆண்டு வரை காண இயலாது என்று நிறுவனம் கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்