Images
  • ebola in africa
    (படம்: REUTERS/Kenny Katombe/File Photo

உகாண்டாவில் இபோலா தொற்று உறுதி

உகாண்டாவில் முதல் இபோலா தொற்றுநோய்ச் சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் அண்டை நாடுகளில் இபோலா நோய் தற்போது பரவிவருகிறது.

பாதிக்கப்பட்ட ஐந்துவயதுச் சிறுவன் காங்கோ குடியரசுக்குச் சென்று திரும்பியதாகத் தெரிகிறது.

சிறுவனும் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிழக்கு காங்கோவில் கடந்த ஆகஸ்ட் மாதம் பரவத் தொடங்கிய அந்தத் தொற்றுநோயால் சுமார் 1,400 பேர் மாண்டதாக காங்கோ சுகாதார அமைச்சு சொன்னது.

உகாண்டா அண்மை ஆண்டுகளில் அவ்வப்போது இபோலா நோய்ப் பரவலுக்குள்ளாகி வந்துள்ளது. 

Top