Images
  • same-sex marriage
    படம்: AFP/Marcos Pin

ஓரினத் திருமணத்திற்கு அனுமதி வழங்கியது ஈக்குவடோர்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஈக்குவடோரின் அரசமைப்பு நீதிமன்றம் ஓரினத் திருமணத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. பழமைவாதக் கத்தோலிக்கத் தென்னமெரிக்க நாடான ஈக்குவடோரில் ஓரினத் திருமணத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.

ஐந்துக்கு நான்கு என்ற வாக்கெடுப்பில் அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அர்ஜென்ட்டினா, பிரேசில், கொலம்பியா ஆகிய நாடுகளின் வரிசையில், ஓரினத் திருமணத்திற்கு அனுமதி வழங்கும் நாடாக ஈக்குவடோரும் சேர்ந்துள்ளது.

எவ்விதப் பாகுபாடுமின்றி எல்லா மக்களின் மனித உரிமைகளும் அங்கீகரிக்கப்படுவதை, அண்மை முடிவு காட்டுவதாக, வழக்குரைஞர் ஒருவர் குறிப்பிட்டார்.

அவர், ஓரினத் திருமணம் செய்துகொள்ள விரும்புவோருக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருகிறார்.


Top