Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

$2,500க்கு விற்பனையான தக்காளிச் சாறு!

லண்டனில் ஒரு போத்தல் Heinz தக்காளிச் சாறு, ஏலத்தில் 1,500 பவுண்ட் (2,500 வெள்ளி) வசூல் செய்துள்ளது.

வாசிப்புநேரம் -
$2,500க்கு விற்பனையான தக்காளிச் சாறு!

(படம்: heinz/ Instagram)

லண்டனில் ஒரு போத்தல் Heinz தக்காளிச் சாறு, ஏலத்தில் 1,500 பவுண்ட் (2,500 வெள்ளி) வசூல் செய்துள்ளது.

பிரபல பிரிட்டிஷ் பாடகர் எட் ஷீரனின் (Ed Sheeran) உடலில் குத்தப்பட்டுள்ள பச்சையைத் தழுவி போத்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது அதற்குக் காரணம்.

Heinz தோற்றம் கண்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதைக் கொண்டாட ஷீரனின் உடலிலுள்ள பச்சையைத் தழுவி வடிவமைக்கப்பட்ட 150 போத்தல்கள் உலகெங்கும் வெளியிடப்பட்டுள்ளன.

அவற்றில் மூன்று நேற்று (ஆகஸ்ட் 15) ஏலத்துக்கு விடப்பட்டன.

அவை முறையே 1,050 பவுண்ட், 1,100 பவுண்ட், 1,500 பவுண்ட் வசூல் செய்தன.

104 போத்தல்கள் உலக மக்களுக்குக் குலுக்கல் முறையில் பரிசாகக் கொடுக்கப்படும்.

மீதமுள்ள போத்தல்கள் Heinz பற்றி தங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவு செய்யும் superfans எனும் தீவிர ரசிகர்களுக்கும் அரும்பொருளகங்களுக்கும் செல்லும்.

போத்தல்களின் விற்பனை மூலம் வசூல் செய்யப்படும் பணம் இங்கிலாந்தின் கிழக்குப் பகுதியிலுள்ள பிள்ளைகள் அந்திம காலை இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்