Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கிறிஸ்துமஸ் விளக்குகளுக்கு மின்சக்தி விலாங்கு மீனிலிருந்து

அமெரிக்காவின் செட்டனுக (Chattanooga) நகரிலுள்ள டென்னசி (Tennessee) கடல் உயிரினக் காட்சியகம் கிறிஸ்துமஸுக்காக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
கிறிஸ்துமஸ் விளக்குகளுக்கு மின்சக்தி விலாங்கு மீனிலிருந்து

(படம்: Pixabay)

அமெரிக்காவின் செட்டனுக (Chattanooga) நகரிலுள்ள டென்னசி (Tennessee) கடல் உயிரினக் காட்சியகம் கிறிஸ்துமஸுக்காக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அதில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் குறிப்பிடத்தக்கது.

காரணம் அந்த விளக்குகளுக்கு மின்னூட்டுவது 'eel' எனும் விலாங்கு மீன் ஒன்று.

மிகெல் வாட்சன் (Miguel Wattson) என்று செல்லமாகப் பெயர்சூட்டப்பட்டுள்ள அந்த விலாங்கு மீனின் உடலிலிருந்து இயற்கையாகவே வெளியாகும் மின்சக்தி விளக்குகளுக்கு மின்னூட்டுகிறது.

CNN தகவல்படி, மிகெல்லின் நீர்த்தொட்டியில் 'sensor' உணர்கருவிகள் இணைக்கப்பட்டுள்ளன.

மிகெல் உணவு தேடும்போதும் சாப்பிடும்போதும் அதன் உடலில் ஏற்படும் மின்சக்தி, கருவிகள் வழி விளக்குகளைச் சேர்கிறது.

மிகெல் உணவு தேடும்போது அதன் உடலிலிருந்து சுமார் 10 'வோல்ட்' (volt) மின்சக்தி வெளியாகும்.

ஆனால் அது உண்ணும்போது அதன் உடலிலிருந்து 800 'வோல்ட்டுக்கும்' மேலாக மின்சக்தி வெளியாகும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்