Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கைரோவில் 9 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது - 5 பேர் மரணம் 24 பேர் காயம்

கைரோவில் 9 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது - 5 பேர் மரணம் 24 பேர் காயம்

வாசிப்புநேரம் -

எகிப்தியத் தலைநகர் கைரோவில் 9 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 5 பேர் மாண்டனர்.

24 பேருக்குக் காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது அங்கு மீட்புப்பணிகள் நடந்து வருகின்றன.

கட்டட இடிபாடுகளுக்கு இடையே யாரேனும் சிக்கிக்கொண்டுள்ளனரா என அதிகாரிகள் தேடிவருகின்றனர்.

காயமடைந்தவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மக்கள் கூட்டம், கட்டட இடிபாடுகளைச் சூழாமல் இருக்க, காவல்துறை அதிகாரிகள் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

கட்டடம் எப்படி இடிந்தது என்பதற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை.

சம்பவம் தொடர்பாக, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

எகிப்தில் கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் அடிக்கடி நேர்வதுண்டு.

கட்டுமான விதிமுறைகளை மீறி உயர்மாடிக் கட்டடங்கள் கட்டப்படுவதே பெரும்பாலும் அதற்குக் காரணம் எனக் குறைகூறப்படுகிறது.

அனுமதிக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலான மாடிகள் கட்டப்படுவதும், அரசாங்கம் அவற்றை இடிப்பதும் எகிப்தில் அடிக்கடி நடப்பதுண்டு.

- AP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்