Images
  • Egypt Curfew
    (படம்: REUTERS/Mohamed Abd El Ghany)

COVID-19 கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த எகிப்தில் ஊரடங்குச் சட்டம்


எகிப்து, COVID-19 கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த இரண்டு வாரங்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்தவுள்ளது.

இரவு 7 மணியிலிருந்து அதிகாலை 6 மணிவரை ஊரடங்கு நடப்பிலிருக்கும்.

நாளையிலிருந்து அது தொடங்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அவ்வேளையில் பெரும்பாலான பொதுச்சேவை அமைப்புகள் செயல்படமாட்டா.

சட்டத்தை மீறுபவர்கள் எகிப்தின் நெருக்கடிகாலச் சட்டத்தின்கீழ் தண்டிக்கப்படுவர்.

எகிப்தில் இதுவரை 366 பேர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

19 பேர் மாண்டனர்.
 

Top