Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எகிப்தின் சக்காரா தொல்பொருள் தளத்தில் 'முக்கிய கண்டுபிடிப்புகள்'

எகிப்து, கைரோ நகருக்குத் தெற்கே உள்ள சக்காரா (Saqqara) என்னும் பழங்கால இடுகாட்டு நினைவிடத்தில் புதிய பொருள்களைக் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

எகிப்து, கைரோ நகருக்குத் தெற்கே உள்ள சக்காரா (Saqqara) என்னும் பழங்கால இடுகாட்டு நினைவிடத்தில் புதிய பொருள்களைக் கண்டுபிடித்திருப்பதாக அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வாளர் ஜாஹி ஹவாஸ் (Zahi Hawass) தலைமையிலான குழு, 50 க்கும் மேற்பட்ட sarcophagi எனும் கல் சவப்பெட்டிளைக் கண்டுபிடித்ததாக எகிப்தின் சுற்றுலா, தொல்பொருள் அமைச்சு தெரிவித்தது.

அவை 10 முதல் 12 மீட்டர் ஆழத்தில் 52 புதைகுழிகளில் காணப்பட்டதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.

புதிய கண்டுபிடிப்புகள் கிமு 16ஆம் நூற்றாண்டுக்கும்
கிமு 11ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட New Kingdom காலக்கட்டத்தைச் சேர்ந்தவை.

டெட்டி (Teti) மன்னரின் மனைவியான ராணி நேர்ட்டின் (Naert) நினைவிட ஆலயமும் செங்கற்களால் செய்யப்பட்ட மூன்று கிடங்குகளும் அந்த இடத்தில் இருந்ததாக ஹவாஸ் கூறினார்.

12க்கும் மேற்பட்ட பிரமிடுகள், பண்டைய மடங்கள், விலங்குகளை அடக்கம் செய்யும் இடங்கள் ஆகியவற்றைக் கொண்டது சக்காரா.

அது UNESCO-இன் உலக மரபுடைமைத் தலமான பண்டைய எகிப்தியத் தலைநகரம் மெம்பிஸின் (Memphis) அடக்கம் செய்யும் இடமாகும்.

2011 ஆம் ஆண்டு எழுச்சி முதல் இன்றைய கோவிட் -19 தொற்றுநோய் வரை பல அதிர்ச்சிகளைச் சந்தித்துள்ள எகிப்தின் சுற்றுலாத்துறை புதிய தொல்பொருள் கண்டுபிடிப்புகளால் புத்துயிர் பெறும் என்று நம்பிக்கை கொண்டுள்ளது.    

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்