Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

எகிப்தில் கட்டுப்பாட்டுடன் தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

எகிப்தில் கொரோனா கிருமிப் பரவலால் விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
எகிப்தில் கட்டுப்பாட்டுடன் தளர்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

(படம்: REUTERS/Amr Abdallah Dalsh)

எகிப்தில் கொரோனா கிருமிப் பரவலால் விதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

காப்பிக் கடைகளும் உணவகங்களும் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டாலும் அந்நாட்டுப் பிரதமர் முஸ்தஃபா மட்போலி(Mustaffa Madbouly) 25 விழுக்காட்டு வாடிக்கையாளர்களை மட்டுமே கடைகள் அனுமதிக்கலாம் என்றார்.

கேளிக்கைக் கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள் ஆகியவையும் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

பள்ளிவாசல்களும் தேவாலயங்களும் கட்டுப்பாட்டுடன் செயல்படலாம்.

கொரோனா நோயால் மோசமாக பாதிக்கப்பட்ட எகிப்தியப் பொருளியலை மீட்டெடுக்க அந்நாட்டு அரசாங்கம் தீவிரமாக முயன்று வருகிறது.

அனைத்துலக பணநிதியம் எகிப்துக்குக் மேலும் 5.2 பில்லியன் டாலரைக் கடனாக வழங்க நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.

எகிப்தில் 62,000-க்கும் அதிகமானோர் நோய்ப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,600 பேர் மாண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்