Images
  • egy mnk
    படம்: AP file photo

எகிப்து: பேராயர் கொலை; துறவி கைது

எகிப்துத் தலைநகர் கைரோவில் துறவிகளுக்கான மடத்தில், பேராயர் ஒருவரைக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில், துறவி ஒருவரைக் காவல் துறை கைதுசெய்துள்ளது.

அந்த 64 வயது பேராயர் மடத்தில் ரத்த வெள்ளத்தில் மாண்டுகிடக்கக் காணப்பட்டார்.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, துறவிகளுக்கான நடவடிக்கைகளில் சில கட்டுப்பாடுகளை தேவாலயம் அறிவித்தது.

அவர்கள் அனைவரும் தங்கள் சமூக ஊடக் கணக்குகளை ரத்துசெய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தேவாலயத்தின் அதிகாரபூர்வ Facebook பக்கம் மூடப்பட்டுள்ளது.
கொலைச்சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது. 

Top