Images
  • Eiffel Tower
    (படம்: Pixabay) 

ஐஃபிள் கோபுரம் நாளை தற்காலிகமாக மூடப்படவுள்ளது

பாரிசின் ஐஃபிள் கோபுரம் நாளை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

எரிபொருள் விலையேற்றத்தின் தொடர்பில் புதிய வன்செயல்கள் மூளக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அந்த ஏற்பாடு செய்யப்படுவதாக பிரஞ்சுக் காவல்துறையினர் கூறினர்.

Champs-Elysees பகுதியில் உள்ள கடைகளையும் உணவகங்களையும் தற்காலிகமாக மூடுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

அது அங்குள்ள ஆயிரக்கணக்கான வர்த்தகங்களைப் பாதிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Bordeaux நகரில் உள்ள கடைகள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், திரையரங்குகள் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.

பிரெஞ்சுப் பிரதமர் எடுவார்ட் பிலிப் (Edouard Philippe), இந்த வார இறுதியில் சுமார் எண்ணாயிரம் காவல் அதிகாரிகளைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கு உறுதியளித்துள்ளார். 

Top