Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஐஃபல் (Eiffel) கோபுரத்தின் 130 ஆண்டு நிறைவைக் கொண்டாட ஒளிக்காட்சி

ஐஃபல் (Eiffel) கோபுரம் முதன்முதலில் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்ததை வண்ணமயமான ஒளிக்காட்சியுடன் நேற்று (மே 15) பாரிஸில் கொண்டாடினர்.

வாசிப்புநேரம் -
ஐஃபல் (Eiffel) கோபுரத்தின் 130 ஆண்டு நிறைவைக் கொண்டாட ஒளிக்காட்சி

(படம்: AFP/Zakaria ABDELKAFI)

ஐஃபல் (Eiffel) கோபுரம் முதன்முதலில் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்ததை வண்ணமயமான ஒளிக்காட்சியுடன் நேற்று (மே 15) பாரிஸில் கொண்டாடினர்.

1889 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கட்டப்பட்டு அதே ஆண்டு மே 15ஆம் தேதி ஐஃபல் கோபுரம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.

கோபுரம் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஏழு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

324 மீட்டர் உயரம் கொண்ட ஐஃபல் கோபுரம் 1889 ஆண்டு முதல் 1930 ஆம் ஆண்டு வரை உலகின் ஆக உயரமான கோபுரம் என்ற பெயரைப் பெற்றிருந்தது.

1930ஆம் ஆண்டு நியூயார்க்கின் கிரைஸ்லர் கட்டடம் எழுப்பப்படும்வரை ஐஃபல் கோபுரத்திற்கு அந்தப் பெருமை கிடைத்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்