Images
  • einstein
    (படம்: Pixabay)

ஐன்ஸ்டைன் கையால் எழுதிய கணக்கீடுகள் 11.6 மில்லியன் யூரோவிற்கு விற்பனை

விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein), Theory of relativity என்ற ஒப்புமைக் கோட்பாட்டிற்காகக் கையால் எழுதிய கணக்கீட்டுப் பதிவு 11.6 மில்லியன் யூரோவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

அதுவே ஐன்ஸ்டைன் எழுதியவற்றில் ஆக அதிக விலைக்கு விற்கப்பட்ட ஆவணம்.

அந்தக் கணக்கீடுகள் சுமார் 3 மில்லியன் யூரோவிற்குத்தான் விலைபோகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

அதை வாங்கியவர் யார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

சுமார் 100 பேர் ஏலத்தில் கலந்துகொண்டனர்.

அந்த 54 பக்க ஆவணம் 1913ஆம் ஆண்டிற்கும் 1914ஆம் ஆண்டிற்கும் இடையே எழுதப்பட்டது.

அதை ஐன்ஸ்டைனும் அவரது நண்பரான பொறியாளர் மைக்கேல் பெசோவும் (Michele Besso) எழுதியுள்ளனர்.

பெசோவால்தான் அந்தக் கணக்கீடுகள் இன்னமும் இருப்பதாக அதை ஏலத்தில் விற்ற Christie's நிறுவனம் தெரிவித்தது.

ஐன்ஸ்டைன் அதை வைத்திருக்கமாட்டாராம்.

-AFP

Top