Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இலங்கை - யானைகளையும் மக்களையும் பிரிக்க புதிய வேலிகள்

புதிய வேலிகளுக்கான செலவு குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.

வாசிப்புநேரம் -

இலங்கையில் யானைகளையும் மனிதர்களையும் பிரிப்பதற்காகப் போடப்பட்ட மின்சார வேலிகளை நீட்டிக்கவிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கடந்த ஐந்தாண்டில் மதம் பிடித்த யானைகள் 300க்கும் மேற்பட்டோரைக் கொன்றதைத் தொடர்ந்து கிராமவாசிகள் சுமார் 1,200 யானைகளை வெட்டிச் சாய்த்தனர்.

நிலைமைக்கு அவசரத் தீர்வு காண அரசாங்கம் மின்சார வேலிகளைப் போட்டது.

யானைகள் கிராமப்புறங்களுக்குள் நுழைவதைத் தடுக்க மேலும் 2,651 கிலோமீட்டர் தொலைவுக்கு மின்சாரவேலி போடவிருப்பதாக அரசாங்கப் பேச்சாளர் கூறினார்.

ஏற்கனவே 4,349 கிலோமீட்டருக்கு மின்சார வேலிகள் உள்ளன.

அவற்றை மேம்படுத்தவும் திட்டங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

புதிய வேலிகளுக்கான செலவு குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்