Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகின் ஆகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸை முந்தியுள்ள இலோன் மஸ்க்

உலகின் ஆகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸை முந்தியுள்ள இலோன் மஸ்க்

வாசிப்புநேரம் -
உலகின் ஆகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸை முந்தியுள்ள இலோன் மஸ்க்

(கோப்புப் படம்: Reuters)

உலகின் ஆகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸைப் பின்னுக்குத்தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார் தொழில்நுட்பத் தொழில்முனைவர் இலோன் மஸ்க்.

மஸ்க்கின் Tesla மின்சாரக் கார் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்த பின்னர், அவரின் மொத்தச் சொத்து மதிப்பு 128 பில்லியன் டாலர் ஆனது.

தற்போது உலகின் ஆகப் பெரிய பணக்காரர் என்ற பதவியைப் பெற்றுள்ளவர் Amazon நிறுவனத்தின் தோற்றுவிப்பாளர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos).

S&P 500 பங்குச் சந்தைக் குறியீட்டில் Tesla பங்குகள் சேரக்கப்பட்டதும், அதன் பங்கு விலை அதிகரித்தது. நிறுவனத்தின் சந்தை மதிப்பு 500 பில்லியனைத் தாண்டியுள்ளது.

மற்ற கார் நிறுவனங்களைவிடக் குறைவான எண்ணிக்கையில் வாகனங்களைத் தயாரித்தாலும் அதிக மதிப்பைக் கொண்டுள்ளது Tesla.

திரு. கேட்ஸின் மொத்தச் சொத்து மதிப்பு 127.7 பில்லியன் டாலர். அறநிறுவனங்களுக்கு அவர் பெரிய அளவில் நன்கொடைகள் கொடுத்ததால் அவரின் சொத்து மதிப்பு சற்றுக் குறைந்தது. 2017 வரை உலகின் ஆகப் பெரிய செல்வந்தர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்