Images
  • powercut

மின்சாரத் தடையால் பெரிதளவில் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து

இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் நேற்று ஏற்பட்ட மின்சாரத் தடையால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அதனால் வீடுகள், போக்குவரத்து நடவடிக்கைகள், தொலைத் தொடர்புகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு மின்சார உற்பத்தி இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறுதான் மின் தடைக்குக் காரணம் என்றும் அது தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

மின் தடையால் ரயில் போக்குவரத்து தாமதமானது; ரத்து செய்யப்பட்டது. அதனால், பல நூற்றுக்கணக்கான பயணிகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

சில இடங்களில், போக்குவரத்து விளக்குகளும் செயல்படவில்லை.

ஏற்கனவே, இங்கிலாந்து மக்கள் அதிக வெயிலால் அவதிப்பட்டு வருகின்றனர். அண்மைக் காலமாக, அங்கு ஏற்பட்டு வரும் போக்குவரத்து தொடர்பான தொழில்நுட்பக் கோளாறுகளால், மக்கள் மேலும் அதிருப்தியில் உள்ளனர்.

Top