Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பிரான்சிலிருந்து பிரிட்டன் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்தது; 31 பேர் மரணம்

இங்கிலிஷ் கால்வாயில் (English Channel) சென்று கொண்டிருந்த அகதிகள் படகு கவிழ்ந்ததில் 31 பேர் மாண்டனர். 

வாசிப்புநேரம் -

இங்கிலிஷ் கால்வாயில் (English Channel) சென்று கொண்டிருந்த அகதிகள் படகு கவிழ்ந்ததில் 31 பேர் மாண்டனர்.

பிரான்சின் துறைமுக நகர் வழியே அவர்கள் பிரிட்டனைச் சென்றடைய முயன்றதாகத் தெரிகிறது.

பிரெஞ்சு அதிபர் இமானுவல் மக்ரோன் (Emmanuel Macron), குடியேறிகள் விவகாரம் பற்றி விவாதிப்பதற்காக ஐரோப்பிய அமைச்சர்களின் அவசரக் கூட்டத்தை நடத்தவிருக்கிறார்.

படகு விபத்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிப்பதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் (Boris Johnson) கூறினார்.

ஆள்கடத்தல் கும்பல்களே துயரத்துக்குக் காரணம் என்று குற்றஞ்சாட்டிய அவர், குடியேறிகள் எல்லை கடப்பதைத் தடுக்கக் கூடுதல் ஆதரவு வழங்கத் தயார் என்றார்.

2018 க்குப் பிறகு, எல்லை கடக்கும்போது நேர்ந்த மிக மோசமான விபத்து அது என்று அதிகாரிகள் கூறினர்.

ஐந்து பெண்களும் குழந்தைகள் இருவரும் மாண்டோரில் அடங்குவர். படகில் 34 பேர் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருவர் காப்பற்றப்பட்டனர். மேலும் ஒருவரைக் காணவில்லை.

படகில் செல்ல உதவிய சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்