Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

பண்ணையிலிருந்து தப்பியோடிய வரிக் குதிரைகள் - பிடிக்கத் தடுமாறும் அதிகாரிகள்

காணாமற்போன நாய்கள், மரத்தில் மாட்டிக்கொண்ட பூனைக்குட்டிகள் ஆகியவற்றைக் காப்பாற்றியே பழகிய அதிகாரிகள்...

வாசிப்புநேரம் -
பண்ணையிலிருந்து தப்பியோடிய வரிக் குதிரைகள் - பிடிக்கத் தடுமாறும் அதிகாரிகள்

Pixabay

காணாமற்போன நாய்கள், மரத்தில் மாட்டிக்கொண்ட பூனைக்குட்டிகள் ஆகியவற்றைக் காப்பாற்றியே பழகிய அதிகாரிகள்...

பண்ணையிலிருந்து தப்பியோடிய வரிக்குதிரைகளைப் பிடிக்கத் திணறுகின்றனர்.

அமெரிக்காவின் மேரிலந்து (Maryland) மாநிலத்தின் தனியார் பண்ணை ஒன்றிலிருந்து 5 வரிக்குதிரைகள் சென்ற வாரம் தப்பியதாக The Guardian செய்தி நிறுவனம் கூறியது.

அவை உணவு தேடிக் குடியிருப்புப் பகுதிகளில் மேய்ந்துகொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

குடியிருப்பாளர்கள் அவற்றின் சேட்டைகளை ரசித்தாலும் அதிகாரிகளுக்குத் தலைவலியே.

அவை மிகவும் வேகமாக ஓடுவதால் அவற்றைப் பிடிக்க முடியவில்லை எனப் புலம்புகின்றனர்.

தற்போது, வரிக்குதிரைகளுக்கு உணவு வழங்கும் நிலையம் ஒன்றை அதிகாரிகள் அமைத்துள்ளதாய் The Guardian தெரிவித்தது.

தினமும் காலையில் அந்த வரிக்குதிரைகள் அங்கு வந்து உணவு உட்கொள்வதாகக் கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் அவற்றுக்கு மயக்க மருந்து செலுத்தி, மீண்டும் பண்ணைக்குக் கொண்டுசெல்வது அவர்களின் திட்டம்.

எனினும், வரிக்குதிரைகள் பயந்துபோனால் அவை இன்னும் தூரமாக ஓடிச் செல்லலாம் என அஞ்சப்படுகிறது.

தப்பியோடிய ஐந்தையும் சேர்த்து அந்தத் தனியார் பண்ணையில் மொத்தம் 39 வரிக்குதிரைகள் இருந்தன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்