Images
  • cyber security attacks
    படம்: REUTERS

இணையத் தாக்குதல் நடத்துவோரைத் தண்டிக்க ஐரோப்பிய நாடுகளுக்குப் புதிய அதிகாரம்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஐரோப்பிய ஒன்றியம், ஒன்றிய நாடுகளுக்கு வெளியிலிருந்து நடத்தப்படும் இணையத் தாக்குதல்களை எதிர்கொள்ளப் புதிய அதிகாரத்தைப் பயன்படுத்தவுள்ளது.

பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற சந்திப்பில், 28 நாடுகளைப் பிரதிநிதித்து ஒன்றிய அமைச்சர்கள் கூடினர். அதில் அந்தப் புதிய அதிகாரத்தின் கட்டமைப்பு குறித்து அறிவிக்கப்பட்டது.

அதன்மூலம் இணையத் தாக்குதல் நடத்துவோரின் சொத்துகளை முடக்க முடியும்.

தனிநபர், நிறுவனம், அரசாங்க அமைப்புகள் ஆகியவை மீது பயணத் தடைகளை விதிக்கவும் புதிய அதிகாரம் வகைசெய்யும்.

இணையத் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும், அதுபோன்ற சம்பவங்களை எதிர்கொள்ளவும் புதிய அதிகாரம் வழிவகுக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.



Top