Images
Oxford-AstraZeneca தடுப்பு மருந்தின் பரிசீலனைகளைத் துரிதப்படுத்தவிருக்கும் ஐரோப்பா
ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், Oxford-AstraZeneca COVID-19 தடுப்பு மருந்தின் பரிசீலனைகளை இம்மாதம் துரிதப்படுத்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
தடுப்பு மருந்துக்கான நிபந்தனையுடன் கூடிய ஒப்புதலை இம்மாதம் ஐரோப்பிய அதிகாரிகள் வழங்கக்கூடும்.
இதனால், பாதுகாப்பு, பக்கவிளைவுகள் குறித்த அவசியமான தகவல்கள் கிடைப்பதற்கு முன்னரே ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுக்கு தடுப்பு மருந்து விற்கப்படலாம்.
ஒப்புதல் வழங்கப்பட்டால் AstraZeneca தடுப்பு மருந்து ஐரோப்பாவில் கிடைக்கக்கூடிய மூன்றாவது தடுப்பு மருந்தாக இருக்கும்.
இதற்குமுன் Pfizer, Moderna நிறுவனங்களின் தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.